Saturday, April 9, 2011

உருளைக்கிழங்கு குருமா / Potato Kurma


தேவையானவை

உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 4 ஸ்பூன்

சிறிது எண்ணெயில் வதக்கி அரைக்கவும்

சோம்பு - 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவள் - 1 கப்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 இஞ்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,மல்லி இலையை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு,கறிவேப்பிளை போட்டு தாளிக்கவும்.வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு சேர்த்துவதக்கவும்.
அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து ஊற்றி,உப்பு சேர்த்து
நன்றாக கொதிக்கவிடவும்.கடைசியில் மல்லி இலை போட்டு இறக்கவும்.
பூரி,சப்பாத்தி,இட்லிக்கு ஏற்றது.

No comments: